Tuesday January 7, 2025
SNc Channels:

Search
About Salem-News.com

 

Dec-14-2012 23:03printcomments

TGTE Prime Minister, Rudrakumaran's Speech on Human Rights Day in English

Message from the Trans National Government of Tamil Eelam in Sri Lanka.

Visuvanathan Rudrakumaran
Visuvanathan Rudrakumaran. By Ron Ridenour links.org.au

(COLOMBO, Sri Lanka ) - The Prime Minister of Transnational Government of Tamil Eelam (TGTE), Rudrakumaran gave a speech on 10 December on Human Rights Day, where he reminded the International Community about their undertakings 60 years ago.

http://www.youtube.com/watch?v=4EgDMg6v8b8
http://youtu.be/4EgDMg6v8b8

தமிழர்களுக்கு உதவ ஐ.நா தவறிவிட்டது : சர்வதேச மன்னிப்புச் சபையின் கனேடியப்; பிரதிநிதி ஜோன் ஆர்க் !


அடிப்படை மனித உரிமைகளை இழந்துள்ள இலங்கைத்தீவின் தமிழ் மக்களுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதென சர்வதேச மன்னிபுச்சபையின் கனேடிய பிரதிநிதியான ஜோன் ஆர்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக மனித உரிமைகள் நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனடாவின் ஸ்காபுறோ பகுதியில் ஒருங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கருத்தினை ஜோன் ஆர்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பெருந் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி விரக்தி அடைந்த நிலையில் உள்ள இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வினைக் காண ஐ.நாப் பொதுச் செயலர்;  பான் கீ மூன் அவர்களது விரைந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை சிறிலங்கா அரசின் செயல் குறித்து சர்வதேச ரீதியில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்த ஜோன் ஆர்க  அலர்கள் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தி தமிழ் மக்களையும் பாரபட்சமின்றி நடாத்துமாறும் தமது அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபையு வலியுறுத்தி வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

நா.தமிழீழ அரசாங்கத்தின் துணை அமைச்சர் வின் மாகாலிங்கம் அவர்களது தலைமையில்  இடம்பெற்றிருந்த இக்கருத்தரங்கில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கருத்துக்கள் கணொளிவழி இணைக்கப்பட்டிருந்தது.

அவைத் தலைவர் பொன் பாலராஜன் , வண பிதா சந்திரகாந்தன் ,  ஈழவேந்தன் ஐயா , படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன், தமிழர் பேரவைப் பிரதிநிதி பூபாலபிள்ளை ஆகியோர் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

கருத்துரைகளின் சுருக்கம் :


பிரதமர் வி.உருத்திரகுமாரன் :

இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் தமிழ் மக்கள் தாங்கொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களது உயிருக்கு எதுவித பாதுகாப்புமே இல்லை. தமிழ் மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஐ.நா.வின் 99வது சரத்தின் படி ஐ.நா.செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிலங்கா அரசின் செயல்களைக் கண்காணிக்க ஐ.நா.அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

வண பிதா சந்திரகாந்தன் :

பத்து மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்ட பின்னரே மனித உரிமை பற்றி குரல் எழுப்பப்பட்டது.
மனித உரிமை அமுலாக்கப்பட்ட 1945ம் ஆண்டிலேயே சிறிலங்காவும் சுதந்திரம் அடைந்தது. ஆனால் மனித உரிமை சம்பந்தமான 32 சரத்துக்களையும் சிறிலங்கா அரசு மீறியுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது அவர்களைப் பாதுகாக்க ஐ.நா.தவறி விட்டது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  பொதுநலவாய  அமைப்பு நாடுகளின் மாநாட்டுக்கு முன்னர் ஏனைய நாடுகளின் தூதுவர்கள், நீதிக்கும் சமாதனத்துக்கும், மனித உரிமைகளுக்காகவும் பாடுபட்டு வரும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் தொடர்பு கொள்ள வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

அவைத்தலைவர் பொன் பாலராஜன் :

சிரியாவிலே கொத்தணிக் குண்டுகளும், இரசாயனக் குண்டுகளும் போடப்பட்டதாக இன்று பல நாடுகளும் பேசிக் கொள்கின்றன. ஆனால் சிறிலங்காவில் அவை போடப்பட்ட போது எவருமே குரல் எழுப்பவில்லை.

எமது உரிமைகளைப் பெறுவதற்காக இறுதி வரை போராடுவோம் எனக் கூறி எமது இளைஞர்கள் போராடியதே தனி நாடு அமைப்பதற்கான சங்கற்பமென அயர்லாந்து பேராசிரியர் ஒருவர் கூறினார்.
பூர்வீகக் குடிகளின் உரிமை களைப் பறிப்பது அநீதி. இனம், மதம், மொழி ரீதியில் பாரபட்சம் காண்பிப்பது இனவாதமாகும்.

உகண்டாவுக்கு அடுத்ததாக இலங்கையிலேயே பரரிய இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான தகவல்களும், ஆவணங்களும் எம்மிடம் உள்ளன. அவற்றின் மூலம் சர்வதே சங்களின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

துணை அமைச்சர் வின் மகாலிங்கம் :

மனித உரிமையானது கேட்டுப் பெற்றுக் கொள்வதல்ல அது பிறப்பினால் கிடைப்பது என ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமை சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களாகிய நாம் அதனை போராடித் தான் பெற வேண்டியிருக்கின்றது. மனித உரிமை சாசனத்தில் மொத்தம் முப்பது உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கம், காரணம் எதுவுமின்றி பிறரால் தாக்கப்படாது இருத்தல், ஒருவரது வீட்டினுள்ளோ, தனிப்பட்ட இடங்களுக்கு உள்ளேயோ அனுமதி இன்றி நுழையாது இருத்தல், உணவு மருந்து ஆகியவற்றை மக்களுக்கு வழங்குதல், மக்கள் தமது சுதந்திரத்தையும், உரிமைகளையும் பாதுகாத்தல், மக்கள் கொடூரமாக நடாத்தப்படும் பட்சத்தில் தமது நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்கு தப்பி ஓடுதல், கருத்துச் சுதந்திரம், மக்கள் தமது அபிப்பிரா யங்களை வெளிப்படுத்துதல் ஆகியன அவற்றில் சிலவாகும். ஆனால் சிறிலங்காவிலுள்ள தமிழ் மக்களு க்கு இவை யாவும் மறுக்கப்பட்டு வருகின்றன.

நாதம் ஊடகசேவை

________________________________________

_________________________________________




Comments Leave a comment on this story.
Name:

All comments and messages are approved by people and self promotional links or unacceptable comments are denied.


[Return to Top]
©2025 Salem-News.com. All opinions expressed in this article are those of the author and do not necessarily reflect those of Salem-News.com.


Articles for December 13, 2012 | Articles for December 14, 2012 | Articles for December 15, 2012
Annual Hemp Festival & Event Calendar

Sean Flynn was a photojournalist in Vietnam, taken captive in 1970 in Cambodia and never seen again.

Special Section: Truth telling news about marijuana related issues and events.

Tribute to Palestine and to the incredible courage, determination and struggle of the Palestinian People. ~Dom Martin

The NAACP of the Willamette Valley

Support
Salem-News.com: